என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » துக்கம் அனுசரிப்பு
நீங்கள் தேடியது "துக்கம் அனுசரிப்பு"
இலங்கையில் நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்படுகிறது. #SriLankacurfew #SriLankablasts
கொழும்பு:
இலங்கையில் 290 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.
அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா தலைமையில் இன்று முற்பகல் தேசிய பாதுகாப்பு சபைகூடியபோது நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SriLankacurfew #SriLankablasts
மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரம், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அனந்த குமாருக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #AnanthKumar #RIPAnanthKumar

×

X